Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி படுகை பாசன விவசாயிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையை தமிழக முதல்வர் விஜய் நாளை திறந்து வைக்கிறார்.
காவிரி டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக, நாளை முதல் அடுத்த 45 நாட்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
இதனால் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் பெரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முதல்வர் விஜய் நாளை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் புறப்படுகிறார்.
சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் வந்திறங்கும் அவர், அங்கிருந்து கார் மூலம் மேட்டூர் அணைக்கு சென்று, முறைப்படி தண்ணீரை திறந்து வைக்கிறார்.
முதல்வரின் வருகையை முன்னிட்டு சேலம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரை முதல்வர் செல்லும் வழிநெடுகிலும் போலீசார் தடுப்புகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முக்கிய சந்திப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b