Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக முதல்வர் விஜய் மீதான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி அவர் தாக்கல் செய்துள்ள மனுக்களுக்கு பதிலளிக்குமாறு, திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் மற்றும் வாக்காளர் லட்சுமி நரசிம்மன் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதேபோல், பெரம்பூர் தொகுதியில் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து வாக்காளர் லட்சுமி நரசிம்மன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரு தேர்தல் வழக்குகளையும் நிராகரிக்கக் கோரி தமிழக முதல்வர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி வி. லட்சுமி நாராயணன், விஜய் தாக்கல் செய்துள்ள நிராகரிப்பு மனுக்களுக்கு தேர்தல் வழக்குகளைத் தாக்கல் செய்த இனிகோ இருதயராஜ் மற்றும் லட்சுமி நரசிம்மன் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், வழக்கு விசாரணையை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam