துறையை மாற்றிச் சொன்ன முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் - உடனே திருத்திய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக சட்டப்பேரவையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. அதற்கு முன்னதாக துறை ரீதியான கேள்வி நேரம் எட
Former Chief Minister O. Panneerselvam misstated the department name


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக சட்டப்பேரவையில் இன்று (31-08-26) மாற்றுத் திறனாளிகள், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மைத் துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

அதற்கு முன்னதாக துறை ரீதியான கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு துறை அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அதன்படி, முன்னாள் முதல்வரும் திமுக எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் நெடுஞ்சாலைத் துறை சார்பாக கேள்வியை எழுப்பும்போது அதை தவறுதலாக போக்குவரத்து துறை என மாற்றி சொல்லிவிட்டார்.

அதனை உடனே பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திருத்தியதும், அதை வழிமொழிந்து ஓ.பன்னீர்செல்வமும் அதை திருத்திக் கொண்டார்.

கேள்வி நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,

மதுரையில் இருந்து தேனி செல்கின்ற பாதையில் உசிலம்பட்டி மற்றும் ஆண்டிப்பட்டி பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தேனி சென்று குமிழி செல்பவர்களுக்கும் மூணாறு செல்பவர்களுக்கும் மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகவே ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி பகுதியில் பைபாஸ் சாலை அமைப்பதற்கு போக்குவரத்து துறை அமைச்சரிடம் கவனத்தில் கொண்டு வருகிறேன் என்று கூறினார்.

உடனே எழுந்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அண்ணன் ஓ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் என சொன்னீர்கள், ஆனால் அது நெடுஞ்சாலைதுறை என்று தெரிவித்தார்.

இதையடுத்து எழுந்த ஓ.பன்னீர்செல்வம், திருத்தி வாசித்துகொள்ளவும் அது பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்கள்.. என்று கூறினார்.

Hindusthan Samachar / vidya.b