ஒகேனக்கல்லில் 10,000 கன அடியாக நீடிக்கும் நீர்வரத்து
சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.) ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 10,000 கன அடியாக நீடித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், தற்போது
ஒகேனக்கல்


சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து வினாடிக்கு 10,000 கன அடியாக நீடித்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வரும் தண்ணீரின் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்த நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டாவது நாளாக வினாடிக்கு 10,000 கன அடியாக நீடித்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துச் செல்வதால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நீர்வரத்து அதிகமாக இருப்பதால், ஒகேனக்கல் அருவி மற்றும் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடைகள் தொடர்ந்து அமலில் உள்ளன. குறிப்பாக, மாவட்ட நிர்வாகத்தால் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து 16-வது நாளாக நீடித்து வருகிறது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஆற்றில் இறங்கவோ, தடையை மீறி பரிசலில் செல்லவோ கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நீர்வரத்து குறைந்து, பாதுகாப்பான சூழல் ஏற்பட்ட பின்னர் மட்டுமே பரிசல் இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam