Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
கள்ளக்குறிச்சி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் திருநெல்வேலியில் ஒருவர் தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பதிவில், கள்ளக்குறிச்சி அருகே வயலுக்கு இரவு காவலுக்குச் சென்ற மூதாட்டி, நகைகளுக்காக தலையில் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், திருநெல்வேலி மணி மூர்த்திஸ்வரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் குடியிருப்பு பகுதியிலேயே தலையைத் துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் குற்றச் சம்பவங்கள், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்று உள்ளதா என்ற கேள்வியை எழுப்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்தனை சம்பவங்களுக்குப் பிறகும் இன்னும் எத்தனை காலத்திற்கு சாக்குப்போக்குகளை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கப் போகிறது தவெக அரசு? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ