Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தீண்டாமை, சாதியப் பாகுபாட்டுக்கு எதிராக குரல் எழுப்பியதற்காகவே, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தொடர்பான சம்பவத்தில் ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ராகுல் காந்தி மீது FIR பதிவு செய்திருப்பது ஆர்.எஸ்.எஸ்.–பா.ஜ.க.வின் ஆழமாக வேரூன்றியுள்ள மனுவாத சிந்தனையை வெளிப்படுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
மேலும், சாதியப் பாகுபாட்டை கேள்வி கேட்பவர்கள் குறிவைக்கப்படுவதும், அதை பாதுகாப்பவர்கள் பாதுகாக்கப்படுவதும் பா.ஜ.க.வின் நிலைப்பாடாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
தீண்டாமையை ஒழிப்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தின் 17-வது பிரிவு கொண்டுவரப்பட்டதும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்க SC/ST வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதும் சமூக நீதிக்கான போராட்டத்தில் காங்கிரஸின் வரலாற்றுச் சாதனைகள் என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், “தீண்டாமையை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ். நடத்திய இயக்கம் எங்கே? சாதிய ஏற்றத்தாழ்வையும் மனுவாத சமூக அமைப்பையும் தகர்க்க பா.ஜ.க. செய்த வரலாற்றுச் சாதனை என்ன?” என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சமூகப் பாகுபாட்டை எதிர்கொள்வதற்குப் பதிலாக, பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக்கி, அநீதிக்கு எதிராக எழுப்பப்படும் குரலையே குற்றமாக்க பா.ஜ.க. அரசு முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது அரசியல் ஆணவம் மட்டுமல்ல என்றும், சமத்துவம், கண்ணியம் மற்றும் சமூக நீதியை வலியுறுத்திய அம்பேத்கரின் அரசியலமைப்புச் சிந்தனையின் மீதான நேரடியான தாக்குதல் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
FIR மூலம் ராகுல் காந்தியின் குரலை ஒடுக்க முயற்சி செய்யலாம்; ஆனால் சாதியப் பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
“அரசியலமைப்பைக் காப்போம்; சமூக நீதியைக் காப்போம்; சாதியப் பாகுபாட்டை எதிர்த்து தொடர்ந்து போராடுவோம்” என மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P