பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளார் இல்லம் புதுப்பிக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன் உறுதி
சென்னை, 31 ஆகஸ்ட் ( ஹி.ச.) சென்னை அருகே பல்லாவரத்தில் உள்ள தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாரின் இல்லம் கடந்த கால வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த இல்லத்தில் இருந்த நூல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வேறு இடத
Maraimalai Adigal's residence in Pallavaram will be renovated


சென்னை, 31 ஆகஸ்ட் ( ஹி.ச.)

சென்னை அருகே பல்லாவரத்தில் உள்ள தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகளாரின் இல்லம் கடந்த கால வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக அந்த இல்லத்தில் இருந்த நூல்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

எனவே அந்த இல்லத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பல்லாவரம் எம்.எல்.ஏ. காமாட்சி கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், முந்தைய அரசாங்கத்துடன் போட்டி போட்டுக்கொண்டு தற்போதைய அரசு தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களையும், தமிழ் சான்றோர்களின் இல்லங்களையும் சிறப்பான முறையில் புதுப்பித்து வருகிறது என்று தெரிவித்தார். அந்த வரிசையில் பல்லாவரத்தில் உள்ள மறைமலை அடிகளார் இல்லமும் நிச்சயமாக புதுப்பிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் இது தொடர்பாக மறைமலை அடிகளாரின் குடும்பத்தினரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு, அவர்களின் ஆலோசனையின் பேரில் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

எம்.எல்.ஏ.வின் கேள்விக்கு அமைச்சர் உடனடியாகவும், சிறப்பாகவும் பதிலளித்ததை சபாநாயகரும் பேரவை தலைவருமான ஜே. சி. டி. பிரபாகர் சபாஷ், இதுதான் சரியான போட்டி என்று பாராட்டினார். இதனைத் தொடர்ந்து அமைச்சரின் பதிலை வரவேற்ற சபாநாயகர் இது போன்ற ஆக்கப்பூர்வமான போட்டி தமிழ் வளர்ச்சிக்கு தேவை என்று குறிப்பிட்டார்.

Hindusthan Samachar / vidya.b