மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10,485 கன அடியாக அதிகரிப்பு
சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.) மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 9,035 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 10,485 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணை


சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று வினாடிக்கு 9,035 கன அடியாக இருந்த நீர்வரத்து, தற்போது 10,485 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது.

அணையின் தற்போதைய நீர்மட்டம் 90.92 அடியாக உள்ளது. அணையில் 53.70 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருவதால், அணையின் நீர்மட்டம் மற்றும் நீர்வரத்து நிலவரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவை பொறுத்து அடுத்தடுத்த நாட்களில் நீர்மட்டத்தில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam