பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு - முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், கூட்டுறவு பால் உற்பத
Milk procurement price raised to Rs. 44 per litre


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பால் கொள்முதல் விலை மீண்டும் உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் பேசிய அவர், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான விலை, லிட்டருக்கு மேலும் 3 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதன்மூலம் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 44 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 38 ரூபாயில் இருந்து 41 ரூபாயாக உயர்த்தப்பட்டிருந்தது. தற்போது அதனுடன் கூடுதலாக மேலும் 3 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீவன விலை உயர்வு மற்றும் மாடுக பராமரிப்புச் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், பால் உற்பத்தியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த விலை உயர்வின் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த சுமார் 3.15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் நேரடியாக பயனடைவார்கள் என்றும், பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் விஜய் குறிப்பிட்டார்.

இந்த விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை அரசே ஏற்கும் என்றும், இதனால் நுகர்வோருக்கு விற்கப்படும் ஆவின் பாலின் விலையில் தற்போதைக்கு மாற்றம் இருக்காது என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b