முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சி - அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிடம், முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சி நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,
முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சி - அமைச்சர் ஜெகதீஸ்வரி தகவல்


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சமூகநலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிடம், முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் முயற்சி நடைபெறுகிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், உண்மை அது தானே, வெயிட் பண்ணி பாருங்க... கண்டிப்பாக நடக்கும்” என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், இன்று மானியக் கோரிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசுகிறேன். உண்மையிலேயே சின்ன ஒரு பதற்றமான சூழ்நிலையில் இருக்கிறேன். இருந்தாலும் மக்களுக்காக கண்டிப்பாக ரொம்ப தைரியமாக பேசுவேன். என்னை நம்பி முதல்வர் இந்த பதவியை எனக்கு கொடுத்ததை பதவியாக பார்க்கவில்லை, ஒரு கடமையாக பார்த்து மக்களுக்கு சேவை செய்வது மட்டும் தான் என்னுடைய நோக்கம். அதனால் கண்டிப்பாக நல்லது செய்வோம் என்று கூறினார்.

தவெக ஆதரவுடன் 2029 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் அரியணையில் அமர வைக்கலாம் என காங்கிரஸ் கணக்கு போட்டிருக்கும் சூழ்நிலையில், முதல்வர் விஜய்யை பிரதமர் ஆக்கும் முடிவில் தவெக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து பேசி வருவது காங்கிரஸ் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில், முதல்வர் விஜய் பிரதமர் ஆவதற்கு 9% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே - சி ஓட்டர் என்ற செய்தி நிறுவனங்கள் சில தினங்களுக்கு முன்பு கருத்து கணிப்பு வெளியிட்டது.

இந்தியா டுடே நிறுவனமும் சி-ஓட்டர் நிறுவனமும் இணைந்து, ‘மூட் ஆஃப் த நேஷன்’

(Mood of the Nation) என்ற பெயரில் 2029ஆம் மக்களவைத் தேர்தலில் யார் பிரதமர் ஆவார்? என்று பொதுமக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்திக்கு அடுத்ததாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய், 2029இல் பிரதமர் ஆவார் என்று 9.2% ஆதரவு அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு காங்கிரஸ் கட்சியை மேலும் அதிருப்திக்குள்ளாக்கியது.

Hindusthan Samachar / vidya.b