Enter your Email Address to subscribe to our newsletters

ராஞ்சி , 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் இருந்து, டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியதால் ராய்ப்பூரைச் சேர்ந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரைச் சேர்ந்த நாராயண் சென், தினேஷ் ஓஜா, பிரேம் சிங் ஜகத், யதேந்திர பிரகாஷ், தினேஷ் சிங் தாக்கூர் ஆகிய 5 பேரும் வாடகை வாகனத்தில் நேபாளத்துக்கு சுற்றுலா சென்றனர்.
காலை 10 மணியளவில் நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் உள்ள மலேகு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது டீ குடிப்பதற்காக அங்குள்ள ஒரு விடுதியில் வாகனத்தை நிறுத்தினர்.
5 பேரும் விடுதிக்குள் சென்று டீ குடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென அப்பகுதியில் பெருவெள்ளம் ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த 5 பேரும் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு சென்றனர்.
டீ குடிப்பதற்காக வாகனத்தை நிறுத்தியிருந்ததால், அவர்கள் பெருவெள்ளத்தில் சிக்காமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
டீ குடிக்காமல் தொடர்ந்து பயணம் செய்திருந்தால் நாங்களும் வெள்ளத்தில் சிக்கியிருப்போம். 10 முதல் 15 நிமிடங்கள் முன்னதாக அந்தப் பகுதியை கடந்து சென்றிருந்தாலும் ஆபத்தில் சிக்கியிருப்போம். டீ குடிப்பதற்காக எடுத்த சிறிய இடைவெளி எங்களது உயிரை காப்பாற்றியது என்றனர்.
எதிர்பாராதவிதமாக எடுத்த டீ இடைவேளை, நேபாள பெருவெள்ளத்தில் இருந்து 5 இந்திய சுற்றுலாப் பயணிகளின் உயிரை காப்பாற்றிய சம்பவம் குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA