என்.ஐ.எப்.டி கூட்டுப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு
புதுடெல்லி, 31 ஆகஸ்ட் (ஹி.ச) இந்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் 1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகம் (NIFT), NIFT சட்டம் 2006-இன் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். பாரம்பரியக் கலை மற்றும் கைவினைத
என்.ஐ.எப்.டி கூட்டுப் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு


புதுடெல்லி, 31 ஆகஸ்ட் (ஹி.ச)

இந்திய அரசின் ஜவுளித்துறையின் கீழ் 1986-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகம்

(NIFT), NIFT சட்டம் 2006-இன் கீழ் நிர்வகிக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

பாரம்பரியக் கலை மற்றும் கைவினைத்திறன், கல்விசார் அறிவு, வடிவமைப்புப் புத்தாக்கம், தொழில்நுட்பம், ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் தொழில் துறைடனான ஈடுபாடு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, ஃபேஷன் கல்விக்கான ஒரு முன்னணி நிறுவனமாக இக்கழகம் காலப்போக்கில் உருவெடுத்துள்ளது.

அந்த வகையில் புது தில்லியில் இன்று தேசிய ஃபேஷன் தொழில்நுட்பக் கழகத்தின் (NIFT) கூட்டுப் பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ள குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நாடு முழுவதும் உள்ள 18 NIFT வளாகங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் ஜவுளித்துறை அமைச்சகத்தின் செயலாளர் நீலம் ஷாமி ராவ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

இவர்களுடன் பல்வேறு முக்கியப் பிரமுகர்கள், ஆளுநர்கள் குழுவின் உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள், பேராசிரியர்கள், அறிஞர்கள் மற்றும் பட்டதாரிகளும் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / vidya.b