Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் வலங்காபுரி கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் கிராமத்தினர் இன்று ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த புகார் மனுவில் தங்களது கிராமத்தில் அரசு சார்பில் எந்த குடிநீர் திட்டங்களும் நிறைவேற்றப்படாத நிலையில் கிராமத்தின் நிலத்தடி நீரை தான் குடிப்பதற்கும் பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வருகிறோம்.
எங்களது கிராமத்திலிருந்து தான் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் சமூக விரோதிகள் சிலர் பத்துக்கு மேற்பட்ட லாரிகள் மூலம் வலங்காபுரி கிராமத்திலிருந்து குடிநீரை அள்ளிச் சென்று டீக்கடைகளுக்கும் கட்டுமான பணிகளுக்கும் பிற ஊர்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இதனால் நிலத்தடி நீர் ஆதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது எனவே எங்களது கிராமத்தில் இருந்து விற்பனைக்காக குடிநீர் அள்ளிச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / ANANDHAN