Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) கடைகளில் தொடர்ந்து 23 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் பணியாளர்களைக் கருத்தில்கொண்டு, வரும் செப்டம்பர் 1 முதல் புதிய ஊதிய உயர்வு மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் கே. விக்னேஷ் இன்று தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்ட் 31, 2026) நடைபெற்ற தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அமைச்சர் விக்னேஷ் கூறுகையில் டாஸ்மாக் பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை ஏற்று, ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் அரசுத் தரப்பில் 4 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், இந்த இணக்கமான பேச்சுவார்த்தையின் அடிப்படையில், டாஸ்மாக்கில் 23 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் புதிய ஊதிய உயர்வு நடைமுறைக்கு வருகிறது என்று அறிவித்தார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த மாதம்
(ஜூலை 2026) டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20 ஆண்டுகளில் இல்லாத அளவாக 25% வரை பொது ஊதிய உயர்வு மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவக் காப்பீடு சலுகைகளை அமைச்சர் விக்னேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b