சேலத்தில் பெண் துண்டு துண்டாக வெட்டி கொலை- 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை
சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மாநகர் அரிசிபாளையம் குணபாலா ராமசாமி தெரு பகுதியில் உள்ள வீட்டில், பெண் ஒருவர் சுமார் 8 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் மூட்டையாக கட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி
கொலை


சேலம், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மாநகர் அரிசிபாளையம் குணபாலா ராமசாமி தெரு பகுதியில் உள்ள வீட்டில், பெண் ஒருவர் சுமார் 8 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு, உடல் பாகங்கள் மூட்டையாக கட்டப்பட்டு தண்ணீர் தொட்டியில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காலை 8 மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

எனினும், சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்ற நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்தும், கொலையை செய்தவர் யார் என்பது குறித்தும் உடனடி தகவல் கிடைக்காததால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சம்பவம் நடைபெற்ற வீட்டின் அருகே வசித்து வரும் மூன்று இளைஞர்களை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சூரமங்கலம் காவல் உதவி ஆணையர் ரமணி ராமலட்சுமி தலைமையிலான காவல்துறையினர், இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam