கோவை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து ஏளனமாக பேசிய சுந்தர்ராஜன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.) கோவை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து திரைப்பட நிகழ்ச்சி விழா ஒன்றில் திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் பேசியதற்கு பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை எ
Vanathi Srinivasan


சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து திரைப்பட நிகழ்ச்சி விழா ஒன்றில் திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் பேசியதற்கு பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தனது கண்டனத்தை எக்ஸ தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில்,

திரைப்பட நடிகர், இயக்குனர் சுந்தர்ராஜன் திரைப்பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் கோவை குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

1998ல் இந்தியாவே அதிர்ந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 58 பேர் உரிழந்த சம்பவம் இன்னும் மனதை விட்டு அகலாத நிலையில் உயிரிழந்த அப்பாவி பொது மக்களை ஏளனம் செய்து பேசியது முறையன்று.

தங்களது அன்பான உறவுகளை இழந்தவர்களுக்கே அதன் வலி புரியும். கொங்கு மண்டலத்தில் பிறந்த ஒரு பிரபலமே இவ்வாறு பேசியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

நடிகர் சுந்தர்ராஜன் அவர்கள் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பதிவிட்டு உள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN