Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 31 ஆகஸ்ட் (ஹி.ச.)
டாஸ்மாக் ஊழியர்கள் ஊதியம் குறித்த தவெக அரசின் அறிவிப்புக்கு
பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் தனது எக்ஸ் தளத்தில்,
டாஸ்மார்க் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வசூல் செய்யப்படுவதற்கு சொல்லப்படும் பல்வேறு காரணங்களில் முதலாவது ஊழியர்களுக்கான சம்பளம் மிகக் குறைவு என்பதுதான்.
இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில் டாஸ்மாக் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் போன்றோருக்கான ஊதியத்தை உயர்த்தி தவெக அரசு இன்றைய தினம் சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பை வரவேற்கின்றேன்.
இதற்கு மேலும், கூடுதல் ரூபாய் வசூல் செய்தால் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமைச்சர் விக்னேஷ் அவர்களின் எச்சரிக்கை கவனிக்கத்தக்கது.
சொல்லுவதோடு நிறுத்தி விடாமல், கூடுதல் பணம் வசூல் செய்யப்படுவதாக புகார் வரும் வரை காத்திருக்காமல் அரசே நேரடியாக களமிறங்கி கண்காணிப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN