கரூர் மாயனூர் கதவணையில் நீர்வரத்து 1258 கன அடியாக நீடிப்பு
கரூர், 31 ஆகஸ்ட் (ஹி.ச.) கரூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1258 கன அடியாக சீராக நீடித்து வருகிறது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை
Water inflow at the Karur Mayanur Barrage continues at 1,258 cubic feet per second.


கரூர், 31 ஆகஸ்ட் (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் மாயனூர் கதவணைக்கு காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1258 கன அடியாக சீராக நீடித்து வருகிறது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை மற்றும் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் காரணமாக மாயனூர் கதவணைக்கு தொடர்ந்து நீர்வரத்து கிடைத்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி கதவணையின் மொத்த நீர் இருப்பு 446 மில்லியன் கன அடியாக உள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவும், அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவும் சமமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கதவணையில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1258 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன் மூலம் டெல்டா பாசனத்திற்கும், கரூர் மாவட்டத்தின் கட்டளை மேட்டு வாய்க்கால்கள் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களுக்கும் தடையின்றி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

நீர்வரத்து சீராக இருப்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் கதவணையின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b