Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
பிரபல நடிகையும், பின்னணிப் பாடகியுமான ஆண்ட்ரியா, கோவையில் புதிய நகைக்கடை ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது ரிப்பன் வெட்டி நகைக் கடையைத் திறந்து வைத்த அவர், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த பல்வேறு நவீன மற்றும் பாரம்பரிய ரக நகைகளைப் பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்ட்ரியா பேசியதாவது:
முன்பெல்லாம் அடுக்கடுக்காகப் பாரமான நகைகளை அணிவது தான் ஃபேஷனாக இருந்தது.
ஆனால், இப்போது ட்ரெண்ட் முற்றிலும் மாறி விட்டது. இப்பலாம் ஹெவி ஜுவல்ஸ் யாருக்குமே பிடிக்காது.
நகைகள் பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கணும், அதேசமயத்தில் போடுவதற்கு ரொம்ப லைட்டாகவும் (Lightweight), உண்மையாகவும் இருக்கணும்னு தான் எல்லாரும் விரும்புறாங்க.என்று நகை தேர்வு மற்றும் இன்றைய ட்ரெண்ட் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த 'வட சென்னை' திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாக உள்ள 'அரசன்' (வடசென்னை 2) திரைப்படம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு,
நான் சிம்புவோட அம்மா இல்லை... நான் சந்திரா தான் என நடிகை ஆண்ட்ரியா நகைச்சுவையாகவும் அதிரடியாகவும் பதில் அளித்தார்.
நகைக்கடை திறப்பு விழாவில் ஆண்ட்ரியாவின் இந்த கலகலப்பான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Hindusthan Samachar / Durai.J