அசாமில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை - 17 வயது சிறுவன் உள்பட 3 பேர் கைது
அசாம், 04 ஆகஸ்ட் (ஹி.ச.) அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த சி
சிறுமி கொலை கைதிகள்


அசாம், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

அசாம் மாநிலத்தின் ஹைலகண்டி மாவட்டத்தில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், 17 வயது சிறுவன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த சிறுமி கைதானவர்களில் ஒருவருடன் பழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு ஹைலகண்டி மாவட்டத்தின் கட்டிலிச்செர்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலோய்சோரா பகுதியில் உள்ள தனது வீட்டில் சிறுமி உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக முதலில் ஐந்து இளைஞர்களை போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், 17 முதல் 19 வயதுக்குட்பட்ட மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ஹைலகண்டி மாவட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் அமிதாப் சின்ஹா கூறுகையில், கைதானவர்களில் ஒருவருக்கு 17½ வயது மட்டுமே. ஆனால் குற்றத்தின் கொடூரத்தை கருத்தில் கொண்டு, அவரை சிறாராக அல்லாமல் வயது வந்தவராக விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம் என்றார்.

உயிரிழந்த சிறுமியின் குடும்பத்தினர் கூறுகையில், உறவினர் வீட்டில் நடைபெற்ற விருந்தில் அனைவரும் கலந்து கொண்டிருந்தபோது, உறவினருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் சிறுமி இரவு 10.30 மணியளவில் வீட்டிற்குத் தனியாக சென்றதாக தெரிவித்தனர். பின்னர் இரவு 11.30 மணியளவில் வீட்டிற்கு திரும்பியபோது, சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு சிறுமியின் உடலை சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களால் சிதைத்ததாகவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அசாம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P