காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் - பா.ஜ.க எம்பி தர்மஷீலா வலியுறுத்தல்
புதுடெல்லி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடரப்பட்டது. 2023 ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல், பெண்கள் மீதான தாக்குதல் அல்லது குற்ற
காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் - பாஜக எம்பி தர்மஷீலா வலியுறுத்தல்


புதுடெல்லி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

முன்னாள் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடரப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் டெல்லி காவல்துறையினர் பாலியல் துன்புறுத்தல், பெண்கள் மீதான தாக்குதல் அல்லது குற்றவியல் வன்முறை மற்றும் குற்றவியல் மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களை சுமத்தி அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் புகார் வழக்கில் பிரிஜ் பூஷன் சரண் சிங் நேற்று விடுதலை செய்யப்பட்டதை தொடர்ந்து, பாஜக எம்.பி. தர்மஷீலா குப்தா அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

பிரிஜ் பூஷன் மீதான பொய்யான குற்றச்சாட்டை அரசியல் நோக்கத்திற்காக காங்கிரஸ் சுமத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தர்மஷீலா குப்தா கூறுகையில்,

பிரிஜ் பூஷன் மீதான இந்த பொய்யான குற்றச்சாட்டை காங்கிரஸ் தான் சுமத்தியது. காங்கிரஸ் எப்போதும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறது.

அவர்களிடம் எந்த பிரச்சினையும் இல்லை, கொள்கையும் இல்லை, பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதையே வழக்கமாக கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் தனது போக்கை மாற்றிக்கொண்டு நாட்டின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா நேற்று பிரிஜ் பூஷன் விடுதலை குறித்து மத்திய அரசை விமர்சித்திருந்தார்.

புகார் அளித்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறிய அவர், மல்யுத்த வீராங்கனைகளுக்கு காங்கிரஸ் துணை நிற்கும் என்று மீண்டும் உறுதிபடுத்தினார்.

ஒருபுறம் இளம் தலைமுறையினருடன் இருப்பதாக கூறுகிறார்கள், பெண்கள் அதிகாரமளித்தல், பெண்கள் இடஒதுக்கீடு பற்றி பேசுகிறார்கள், மறுபுறம் இப்படி செய்கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே தர்மஷீலா குப்தாவின் கருத்து அமைந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b