Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை காரணம் காட்டி மிரட்டி ரூ.40 லட்சம் வரை பணம் பறித்ததாக காவல் ஆய்வாளர் புகாரி மீது அகில்குமார் என்பவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை பூக்கடை காவல் துணை ஆணையர் கோபி, புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் புகாரியிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில் புகாரில் கூறப்பட்ட விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
விசாரணைக்குப் பிறகு, காவல் ஆய்வாளர் புகாரி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காவல் ஆய்வாளர் புகாரி, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்ட திருவேங்கடம் என்பவரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற நடவடிக்கையில் இடம்பெற்ற அதிகாரிகளில் ஒருவராக அறியப்படுகிறார்.
அகில்குமார் அளித்துள்ள புகார் தொடர்பாக காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை முடிவின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ