உதயநிதி கைதுக்கு எதிராக தி.மு.க. அமளி -மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு
புதுடெல்லி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.) உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து மக்களவை பிற
A


புதுடெல்லி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற மக்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் அவை நடவடிக்கைகளை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

தஞ்சையில் நேற்று தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அவரது பேச்சு தொடர்பாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, த.வெ.க. மகளிரணி சார்பில் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்திலும், தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்கள் அளிக்கப்பட்டன.

இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

உதயநிதி கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பல இடங்களில் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மக்களவை கூடியதும் தி.மு.க. உறுப்பினர்கள் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ஏற்பட்ட அமளி காரணமாக அவை நடவடிக்கைகளை சுமுகமாக நடத்த முடியாத நிலை உருவானது.

இதையடுத்து சபாநாயகர் மக்களவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

பின்னர் அவையில் இருந்து வெளியே வந்த தி.மு.க. எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் திருச்சி சிவா, டி.ஆர். பாலு, ஆ.ராசா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரின் தலைமையில் திரண்டு, உதயநிதி கைதுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உதயநிதி மீதான நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA