Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 04 ஆகஸ்ட் (H.S.)
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மரியன்னை புனித யாத்திரை தலங்களில் ஒன்றான தூத்துக்குடி புனித பனிமய அன்னைபேராலயத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.
இப்பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மூன்று நாட்களுக்கு கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் இந்த நிறுத்தம், இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் என மூன்று நாட்களுக்கு அமலில் இருக்கும். திருவிழாவில் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்துவதற்காக மீனவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
இதன் காரணமாக தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மீனவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பனிமய மாதா பேராலயத்திற்குச் சென்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தூத்துக்குடியில் இது நீண்டகால வழக்கமாக இருந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பனிமய மாதா திருவிழாவில் பங்கேற்பதற்காக மீனவர்கள் தங்கள் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது வழக்கமான நிகழ்வாகும்.
Hindusthan Samachar / vidya.b