Enter your Email Address to subscribe to our newsletters

அமெரிக்கா, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், எரிபொருள் விலை உயர்வின் மூலம் அமெரிக்காவின் முக்கிய எண்ணெய் நிறுவனங்கள் அதிகப்படியான லாபம் ஈட்டி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
எக்ஸான்மொபில், செவ்ரான் போன்ற நிறுவனங்கள் தங்களது எதிர்பாராத லாபத்தில் ஒரு பகுதியை நுகர்வோருக்கு வழங்கும் வகையில் பெட்ரோல் பங்குகளில் விலையை குறைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப் கூறியதாவது,
ஒரு நிறுவனம் கடந்த ஆண்டு ஈட்டியதை விட 12 மடங்கு அதிகமாக லாபம் ஈட்டியுள்ளதை பார்க்கும்போது, அதில் ஒரு பகுதியை அவர்கள் பொதுமக்களுக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும்.
மேலும் அவர்கள் சில்லறை விலையை, நுகர்வோர் விலையை குறைக்க வேண்டும்.
எனக்கு இது பிடிக்கவில்லை. அவர்கள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள், சரியா? பற்றாக்குறையை வைத்து அவர்கள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
எண்ணெய் துறைக்கு ஆதரவான நிலைப்பாட்டை பொதுவாக கொண்டுள்ள டிரம்பின் இந்த கருத்து, அதிலிருந்து குறிப்பிடத்தக்க விலகலாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு எரிசக்தி உற்பத்தியை விரிவுபடுத்துவதை தனது திட்டத்தின் முக்கிய பகுதியாக அவர் மாற்றியுள்ள போதிலும், எரிபொருள் விலையை குறைவாக வைத்திருக்குமாறு உற்பத்தியாளர்களை அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
Hindusthan Samachar / vidya.b