Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு அதிர்ச்சியளிக்கிறது. எல்லாக் காலத்திலும் ஆண்களின் அரசியலுக்கு பெண்களே எளிய இலக்குகளாக இருப்பது மிகவும் வேதனை அளிக்கிறது. பெண்களை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனநிலை, இரட்டை அர்த்தப் பேச்சுகள் உள்ளிட்ட அரசியல் ஆபாசங்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.
பொது வாழ்வில் கண்ணியம் மற்றும் பெண்கள் உள்ளிட்ட சக மனிதர்கள் மீதான மரியாதையைக் கடைப்பிடிப்பது மிக அடிப்படையான பண்பு. பெரியாரின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் ஒருவர் எப்படி பொதுவெளியில் இவ்வளவு அநாகரிகமாகப் பேச முடியும்? மிக நிச்சயமாக இப்படியொரு மோசமான பேச்சை எதிர்க்கட்சித் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எனது கடுமையான கண்டனங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
ஜோதிமணியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அரசியல் வட்டாரங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ