Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)
விவசாயிகள் நலனிலும், காவிரி விவகாரத்திலும் த.வெ.க அரசு அலட்சியமாக செயல்படுவதாக கூறி, தஞ்சாவூரில் தி.மு.க சார்பில் நேற்று (ஆகஸ்ட் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தி.மு.க-வினரும், விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
அவர் பேசுகையில், முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கடுமையான சாடியதோடு, நடிகை த்ரிஷா குறித்தும் விமர்சித்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இதனிடையே நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக தவெக மகளிரணி சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், த.வெ.க சார்பில் மாநிலம் முழுவதும் உதயநிதிக்கு எதிராக இன்று கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது எக்ஸ் தளத்தில்,
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களைத் தனிப்பட்ட முறையில் பழிவாங்க வேண்டும் என்றால், அரசு வழக்குத் தொடுக்கட்டும். நீதிமன்றம் தீர்ப்பளிக்கட்டும்.
ஆனால், எதிர்க்கட்சியாக இருக்கும் தி.மு.க-வை எதிர்கொள்ளத் துணிச்சலின்றி, இப்படியான அடக்குமுறைகளில் தவெக அரசு ஈடுபடுவது சட்டத்திற்குப் புறம்பானது.
நாளை தொடங்கவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவரைப் பங்கேற்கவிடாமல் தடுப்பதற்காகவே கைது செய்வது அப்பட்டமான கோழைத்தனம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN