Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த மூன்று அர்ச்சகர்கள், நெரூர் காவிரி ஆற்றங்கரையில் திதி சடங்கு நடத்துவதற்காக சென்றிருந்தனர்.
அப்போது காவிரி ஆற்றில் இறங்கி சடங்கில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் அருகிலிருந்தவர்கள் உடனடியாக மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால், மருத்துவர்கள் பரிசோதித்தபோது மூவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவிரி ஆற்றில் திதி சடங்கின்போது நிகழ்ந்த இந்த உயிரிழப்பு சம்பவம் கரூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam