Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)
முதல்வர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை ஆபாசமாக பேசியுள்ள ஆபாசநிதியை கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேடை அமைத்து நாங்கள் பதிலுக்கு பேசினால் அதை உங்களால் தாங்க முடியாது. ஆனால், நாங்கள் அவ்வாறு பேச விரும்பவில்லை. எங்களை எங்கள் தலைவர் நாகரிகமான முறையில் வழிநடத்துகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து,கண்ட நேரத்தில் இன்ஸ்டாகிராமில் கண்டதை நோண்டும் ஆபாசநிதிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் குறித்து பேச எந்த அருகதையும் கிடையாது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
லயோலா மணியின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்தைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது கண்டனங்களை சமூக வலைதளங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ