மடைமாற்று அரசியலை விட்டு விட்டு தமிழ்நாட்டின் உரிமைக்காக குரல் கொடுங்கள் – நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச) மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள
Manickam


Ubb


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிலடி அளித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

நான் ஆதாரத்தைக் காட்டிப் பேசினால், உடனே 'Blame Game' என்று கூறுகிறீர்கள். இது வடிவேலு பட வசனத்தைப் போல மிகவும் சிறுபிள்ளைத்தனமாக உள்ளது என்று விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழ்நாட்டில் மேகதாது அணை கட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) அனுமதி அவசியம் என்று பா.ஜ.க. தரப்பில் கூறப்படுவதாகவும், ஆனால் கர்நாடக பா.ஜ.க. மாநிலத் தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, குடிநீர் தேவைக்காக 40 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படுகிறது. மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது என்று கூறியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை மேற்கோள் காட்டிய மாணிக்கம் தாகூர், ஒருபுறம் மத்திய அரசு தமிழ்நாட்டின் அனுமதி தேவையில்லை என்று கூறுகிறது; மறுபுறம் கர்நாடக பா.ஜ.க. மேகதாது அணையைக் கட்டுவோம் என்று வலியுறுத்துகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் பா.ஜ.க. வேறு விதமாக பேசுகிறது. இதில் உண்மையான 'Blame Game' எது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், கட்சி வேறுபாடுகளை மறந்து, தமிழர்களாகவும் தமிழ்நாட்டுக்காகவும் அனைவரும் ஒரே குரலில் நிற்க வேண்டும் என்பதையே நான் தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறேன். மடைமாற்று அரசியலை விட்டுவிட்டு, தமிழ்நாட்டின் உரிமையைப் பாதுகாக்க உண்மையிலேயே ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தனது பதிவில் இதுதொடர்பான காணொளியையும் இணைத்து, கொஞ்சம் நேரம் இருந்தால் அந்த வீடியோவைப் பாருங்கள் என்றும் நயினார் நாகேந்திரனை நோக்கி மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.

மாணிக்கம் தாகூரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, மேகதாது அணை விவகாரம் தொடர்பான அரசியல் விவாதத்தை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ