மூன்றே நாளில் 7 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் - விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் ஏழு அடி வரை உயர்
Mullaperiyar Dam water level rises


தேனி, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தேனி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களில் மட்டும் அணையின் நீர்மட்டம் சுமார் ஏழு அடி வரை உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 3156 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையின் பாதுகாப்பு கருதியும், தமிழகத்தின் குடிநீர் மற்றும் பாசன தேவைக்காகவும் வினாடிக்கு 256 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 112.45 அடியில் இருந்து தற்போது 119.75 அடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b