எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை நிறுத்த வேண்டும் - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கோரிக்கை
புதுடெல்லி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.) பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படும் ‘இ20’ திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். இ20 பெட்ரோல் திட்டத்த
A


புதுடெல்லி , 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்யப்படும் ‘இ20’ திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார்.

இ20 பெட்ரோல் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடியின் இல்லம் நோக்கி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியினர் பேரணியாக சென்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் அழுத்தத்துக்கு பயந்து பிரதமர் மோடி எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று தெரிவித்தார்.

மேலும், அமெரிக்காவிடம் இருந்து எத்தனால் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவில் எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று நம்புவதாக தெரிவித்த கெஜ்ரிவால், அவரை சந்திக்க வேண்டும் என்று தகவல் அனுப்பியுள்ளதாகவும் கூறினார்.

எத்தனால் கலப்பு பெட்ரோல் திட்டத்துக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA