ஆம்னி பேருந்து கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து - 9 வயது சிறுவன் உட்பட 3 பக்தர்கள் பலி, 7 பேர் படுகாயம்
திருச்சி, 04 ஆகஸ்ட் (ஹி.ச) திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பயணித்த கார் மீது, அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில
Omni bus collides head-on with car


திருச்சி, 04 ஆகஸ்ட் (ஹி.ச)

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் பயணித்த கார் மீது, அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணித்த பாண்டியன் வயது 49, தனலட்சுமி வயது 47 மற்றும் 9 வயது சிறுவன் பிரவீன் ஆகிய மூன்று பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் படுகாயமடைந்த 7 பேர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயபுரம் போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து ஆம்னி பேருந்து ஓட்டுநரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b