Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி விவகாரம் தொடர்பாக திமுக சார்பில் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாக பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதயநிதி ஸாடாலினின் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து பழனி பேருந்து நிலையம் முன் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தவெக நகர செயலாளர் மிதுன் தலைமையில் பழனி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக்ராஜா, செயற்குழு உறுப்பினர் பாலன், கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மற்றும் ஏராளமான பெண்கள் உள்பட முன்னூற்றுக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று உதயநிதி ஸ்டாலினை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் உதயநிதி படத்தை தவெகவினர் செருப்பால் அடித்து கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து உடனடியாக போலீசார் உதயநிதி படத்தை கைப்பற்றி எடுத்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Hindusthan Samachar / ANANDHAN