பெண்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் கருத்துகள் ஏற்க முடியாது - உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கண்டனம்
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச) முதல்வர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், பொது வாழ
Rajmohan


Nn


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)

முதல்வர் விஜய் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாகக் கூறப்படும் கருத்துக்கு அமைச்சர் ராஜ்மோகன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பொது வாழ்வில் உள்ளவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. எனவே, அவர்கள் மிகுந்த பொறுப்புணர்வுடனும், நாகரிகத்துடனும் தங்களது கருத்துகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெண்கள் கல்வி, அறிவியல், நிர்வாகம், தொழில், விளையாட்டு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து நாட்டிற்கே பெருமை சேர்த்து வருகின்றனர். அவர்களின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையிலான பேச்சுகளை எந்த சூழலிலும் ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள் என பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகனின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு, அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ