Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு உள்ளார். அந்த கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தனது எக்ஸ் தளத்தில்,
எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி, நீதிமன்ற உத்தரவையும் மீறி, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், இளம் தலைவர் @Udhaystalin அவர்களை கையாலாகாத தவெக அரசின் காவல்துறை கைது செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
காவிரி பிரச்சனையில் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுக்கொடுத்த இந்த #SofaModel அரசு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் தஞ்சாவூரில் பேசியது மக்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதை தாங்கிக்கொள்ள முடியாமல் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.
திமுகவை எந்த வழக்குகளின் மூலமாகவும் பணிய வைக்க முடியாது. வழக்குகளைக் கண்டு அஞ்சும் இயக்கம் அல்ல திமுக.
சட்டப்போராட்டத்தின் மூலம் இந்தக் கோமாளி அரசுக்கு பாடம் புகட்டுவோம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN