சேலத்தில் சோகம்: போதை மாத்திரை, ஊசி பயன்படுத்திய 20 வயது இளைஞர் உயிரிழப்பு
சேலம், 04 ஆகஸ்ட் (ஹி.ச.) சேலம் மணியனூர் காந்திநகர், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சந்தோஷ் (20) என்பவர், போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், போதைப் பொரு
பலி


சேலம், 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

சேலம் மணியனூர் காந்திநகர், அங்காளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் சந்தோஷ் (20) என்பவர், போதை மாத்திரை மற்றும் போதை ஊசி பயன்படுத்தும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், போதைப் பொருட்களை பயன்படுத்திய பிறகு அவருக்கு திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

அவருக்கு சிகிச்சை அளிக்க முயற்சிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி வீட்டிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி காவல்துறையினர் விரைந்து சென்று சந்தோஷின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இளைஞருக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்தது யார், அவருடன் சேர்ந்து போதை ஊசி பயன்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து அன்னதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டால் இளம் வயதினரிடையே உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்தச் சம்பவம் சேலம் பகுதியில் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam