புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு த.வெ.க தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச) புதுச்சேரி முதலமைச்சராக பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் என்.ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இ
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமிக்கு தவெக தலைவர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச)

புதுச்சேரி முதலமைச்சராக பல ஆண்டுகளாக மக்கள் பணியாற்றி வரும் என்.ரங்கசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார்.

இதையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், முதலமைச்சர் ரங்கசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அவர் நீண்ட ஆயுளுடன், நல்ல உடல்நலத்துடன் மக்கள் பணியை தொடர வேண்டும் என வாழ்த்தியதாக கூறப்படுகிறது.

விஜய்யின் வாழ்த்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, தனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்ததுடன், விரைவில் தங்களை நேரில் சந்திக்க வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த தொலைபேசி உரையாடல் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது.

முதல்வர் ரங்கசாமிக்கும், தமிழக முதல்வர் விஜய்க்கும் நெருக்கமான நட்பு உண்டு.

விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு நடந்தபோது முதல்வர் ரங்கசாமி வாழ்த்து தெரிவித்தார்.

அந்த மாநாட்டை தொலைக்காட்சியில் பார்த்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தாலும் விஜய்யுடன் முதல்வர் ரங்கசாமி நெருக்கம் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b