Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், திரைப்பட நடிகர்கள், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த திரைப்பட நடிகை சாய் பல்லவி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கி வழிபட்டவர், தொடர்ந்து உண்ணாமுலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாரை வழிபாடு செய்தனர்.
பின்னர் வைகுந்த வாயில் அருகே நின்று தீபமலையை வழிபட்டார், அது மட்டும் இல்லாமல் கோவிலில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.
கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர், கோவிலுக்கு வருகை நடிகை சாய் பல்லவி உடன் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புகைப்படம் மற்றும் செலுத்தி எடுத்து மகிழுந்தனர்.
திருவண்ணாமலையில் கடந்த 4 தினங்களாக நடிகர் தனுஷ் நடிக்கும் ஓம் திரைப்படம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று சாய் பல்லவி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
Hindusthan Samachar / ANANDHAN