Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் குறித்து அவதூறாகவும், இரட்டை அர்த்தத்திலும் பேசியதாக எழுந்த புகாரில், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 4, 2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அவசர முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் முறையீட்டு மனுவை தாக்கல் செய்து அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த கைது நடவடிக்கை சட்ட விரோதமானது என்றும், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வாதத்தை கேட்டறிந்த நீதிபதி, மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான விரிவான விசாரணை இன்று பிற்பகலில் நடைபெறும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வழக்கு பிற்பகல் பட்டியலில் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது என்ன தீர்ப்பு வரும் என்பதை அறிய அரசியல் வட்டாரங்களும், திமுக தொண்டர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b