உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் அருண் ராஜ் கடும் கண்டனம்
தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து, தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அருண் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது
அருண்ராஜ்


தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது குறித்து, தமிழக மருத்துவத் துறை அமைச்சர் அருண் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தள பதிவில்,

காவிரி நீர் பிரச்சனையில் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக முதலமைச்சர் சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசிய விதம் அவரது உண்மையான அரசியல் முகத்தை வெளிப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.

மேலும், அந்த பேச்சு காவிரியை நம்பி வாழும் விவசாயிகளையும், பெண்களையும், மனித சமுதாயத்தையே இழிவுபடுத்தும் வகையில் இருந்ததாகவும், அது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

திமுகவின் அரசியல் அணுகுமுறையை விமர்சித்த அவர், உதயநிதி ஸ்டாலினின் பேச்சு அவரது சிந்தனையை வெளிப்படுத்துவதாகவும், இத்தகைய அரசியல் தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறினார்.

இறுதியாக, பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுகளுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என்றும் அமைச்சர் அருண் ராஜ் தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P