உதயநிதி பேச்சுக்கு அமைச்சர் ஜெகதீஸ்வரி கண்டனம் - நாகரிகமான அரசியல் அவசியம் என வலியுறுத்தல்
தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்பில் இருப்
Jagadeeshwari.,TN Minister


தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

மகளிர் நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற உயரிய பொறுப்பில் இருப்பவர், அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் முன்வைக்க வேண்டுமே தவிர, தரம் தாழ்ந்த மற்றும் தனிநபர் விமர்சனங்களில் ஈடுபடுவது ஜனநாயக மரபுக்கு ஏற்றதல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் ஆக்கப்பூர்வமான கருத்துகளை முன்வைப்பதற்குப் பதிலாக, அரசியலின் தரத்தை தாழ்த்தும் வகையிலான பேச்சுகளில் ஈடுபடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் தனது பொறுப்பையும் பதவியின் கண்ணியத்தையும் உணர்ந்து, நாகரிகமான அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அரசியலில் கருத்து மோதல்கள் இருக்கலாம்.

ஆனால் நாகரிகமும் பரஸ்பர மரியாதையும் ஒருபோதும் மறையக் கூடாது என்பதை வலியுறுத்துவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P