Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
பேரறிஞர் அண்ணா தொடங்கிய இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை கடைப்பிடிக்காமல், ஆபாச பேச்சுகள் மூலம் பெண்களை இழிவாக சித்தரிப்பதாக உதயநிதி ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.
மேலும், உங்கள் ஆபாச கற்பனைகளை இன்ஸ்டாகிராமோடு நிறுத்திக்கொள்வது நல்லது. பெருமைமிகு பெண்களை கேவலமாக நினைத்து பேசினால், சுயமரியாதை எனும் தீ உங்கள் ஆணவத்தை சாம்பலாக்கிவிடும் என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக, பெண்களை அவமதிக்கும் வகையிலான பேச்சுகளுக்கு எதிராக உதயநிதி ஸ்டாலினுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P