உதயநிதியை ஆபாசநிதி எனக் குறிப்பிட்டு ஆதவ் அர்ஜூனா கடும் கண்டனம்
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழி மற்றும் இரட்டை
ஆதவ் அர்ஜுனா


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுக தலைவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கத்தை ஆபாச மொழி மற்றும் இரட்டை அர்த்தப் பேச்சுகளால் அவமதித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ள அவர், அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாசத்தின் அடையாளமாக மாற்றிவிட்டதாக விமர்சித்துள்ளார்.

மேலும், பெண்கள் குறித்து வெளிப்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் கடும் கண்டனத்திற்குரியவை என்றும், இதுபோன்ற பேச்சுகளை தமிழ்நாட்டு பெண்கள், தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற அரசியல் மற்றும் சமூக அணுகுமுறைகளுக்கே தமிழ்நாட்டு பெண்கள் தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்டியதாகவும், பொது மேடைகளில் இத்தகைய பேச்சுகளைத் தொடரும் நபர்களை அரசியல் ரீதியாக மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் ஆதவ் அர்ஜூனா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக, ஆபாசநிதிக்கு வன்மையான கண்டனங்கள் என்று தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P