உதயநிதி பேச்சுக்கு எதிராக இன்று மாநிலம் முழுவதும் த.வெ.க. ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமையகம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தவெக


தமிழ்நாடு, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று

(ஆகஸ்ட் 4) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த கட்சி தலைமையகம் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் உள்ள பெண் நிர்வாகிகள் தலைமை வகிக்க வேண்டும் என அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஆர்ப்பாட்டம் தொடங்குவதற்கு முன்பாக, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக சட்டவல்லுநர்களுடன் இணைந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முறையான புகார் அளிக்கவும் கட்சி தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இந்தப் போராட்டத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து பங்கேற்று செயல்பட வேண்டும் என்றும் தமிழக வெற்றிக் கழக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P