உதயநிதி பேச்சுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனம் - மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
கோவை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மேகதாது–காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர
வானதி


கோவை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில்,

மேகதாது–காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தம் தரும் வகையிலான தரங்கெட்ட வார்த்தைகளை பேசியதாக குற்றம்சாட்டி, அதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதுபோன்ற நாகரீகமற்ற மற்றும் பொறுப்பற்ற அரசியலுக்காகத்தான் திமுகவை மக்கள் ஆட்சியிலிருந்து அகற்றியதாகவும், 75 ஆண்டுகால அரசியல் இயக்கமான திமுக இப்படிப்பட்ட மேடைப் பேச்சாளர்களை உருவாக்குகிறதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி என்பது தமிழக நலனுக்காக ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கி செயல்பட வேண்டுமே தவிர, அருவருக்கத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி அரசியல் செய்யக் கூடாது என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுகவினரின் இந்த அநாகரிகமான அணுகுமுறையை தமிழக மக்கள், குறிப்பாக பெண்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும், உதயநிதி ஸ்டாலின் தனது பேச்சைத் திரும்பப் பெற்று, பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P