Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் திங்கட்கிழமை (ஆகஸ்டு 3) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அவரது சர்ச்சை பேச்சுக்கு மாற்று கட்சியினர், அரசியல் அமைப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முன்னாள் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது எக்ஸ் தளத்தில்,
உதயநிதி ஸ்டாலின் கைது இனி பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசும் ஒவ்வொருவருக்கும் தக்க பாடம். சட்டத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தருணங்களிலும் நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.
அதேபோல், தமிழ்நாட்டுப் பெண்களை அவதூறாகப் பேசுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியாகத் தொந்தரவு செய்பவர்கள் மீது எவ்வித பாகுபாடின்றி இதேபோன்ற கடுமையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் பட்சத்தில் முதல்வர் விஜய் அவர்களின் இந்த நடவடிக்கையை வரவேற்கலாம் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN