பொறியியல் முதல் சுற்று கலந்தாய்வில் 26,851 இடங்கள் நிறைவு
சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த முதல் சுற்றின் முடிவில் மொத்தம் 26,851 இடங்கள் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த ந
first round of engineering counseling.


சென்னை, 04 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இந்த முதல் சுற்றின் முடிவில் மொத்தம் 26,851 இடங்கள் நிரம்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையிலும், 146 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேராத அதிர்ச்சிகரமான நிலை ஏற்பட்டுள்ளது.

இது பொறியியல் கல்வியின் தற்போதைய போக்கையும், மாணவர்களின் விருப்பத்தேர்வுகளில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

மாணவர்கள் மத்தியில் கணினி அறிவியல் பொறியியல், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் போன்ற படிப்புகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அதிகம் உள்ள இந்தத் துறைகளை நோக்கியே மாணவர்கள் படையெடுப்பதால், பாரம்பரிய பாடப்பிரிவுகளான சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகளுக்கும், பல தனியார் கல்லூரிகளுக்கும் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது.

பொதுப்பிரிவில் முதல் சுற்றில் வேகம் குறைந்துள்ள நிலையில், அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு விறுவிறுப்பாக நடந்திருக்கிறது.

முதல் சுற்றில் பங் கேற்க தரவரிசையில் 1 முதல் 2,570 வரை இடம்பெற்றிருந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அழைக்கப்பட்டனர்.

அவர்களில் 2,177 பேர் இடங்களை தேர்வு செய்து என்ஜினீயரிங் படிப்பை உறுதி செய்துள்ளனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / vidya.b