Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச)
தமிழகத்தில் நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து அவர் தமிழக அரசை, தமிழக முதல்வரை பாராட்டிப் பேசினார். உண்மையான சமூகநீதி கொண்ட ஆட்சியை விஜய்யின் தவெக அரசு நல்கிவருவதாகக் கூறினார்.
ரூ.10 லட்சம் கடன் உள்ள இக்கட்டான சூழலில், மாநிலத்தை நிதி நெருக்கடிகளில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிங்கப்பெண் திட்டம், 200 யூனிட் இலவச மின்சாரம், 717 டாஸ்மாக் கடைகள் மூடல் எனப் பல்வேறு சாதனைகளை தமிழக அரசு செய்துள்ளது என்றார்.
தொடர்ந்து அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:
டெண்டர் முறைகேடுகளை தமிழக அரசு தடுத்துள்ளது.
‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரில் தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தவுள்ளோம்.
அரசுப் பள்ளிகளில் ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் செயல்படுத்தப்படும். ரூ.139 கோடி இதற்காக ஒதுக்கீடு.
பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.
நாளை (06.08.2026) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
அதன் பின்னர் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெறும். அந்தக் கூட்டத்தில், சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் எனச் சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b