மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு
சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.) நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று (ஆகஸ்ட் 5) கூடியது. அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் செய்த
மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு - நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு


சென்னை, 05 ஆகஸ்ட் (ஹி.ச.)

நடப்பு நிதி ஆண்டுக்கான (2026-27) பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காகச் சட்டப்பேரவை இன்று

(ஆகஸ்ட் 5) கூடியது.

அதன்படி காலை 10 மணிக்கு, பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்த அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றின் விவரம் வருமாறு:

69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கட்டண உதவி வழங்கப்படும்.

மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடரும்.

ஹஜ் பயண மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.

கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு.

கபர்ஸ்தான்கள் மற்றும் கல்லறைத் தோட்ட மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.

12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு

அண்ணனின் சீர்: பெண்களின் திருமண நன்னாளில் 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு

சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்: பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள், சாலைகள், குடிநீர், தெரு விளக்குகள், வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் உட்கட்டமைப்பு மேம்பாடு. ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயத் தொழிலாளர்களை நில உரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், பெண்களுக்கு முன்னுரிமை வழங்க மண்ணின் மகள் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும். விவசாயம் செய்திட நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் செயல்படுத்த ரூ.165 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினரின் தொழில் முன்னவுத் திறனை ஊக்குவிக்கும் திட்டம்.

இதன்மூலம் மூலதண மானியம் மற்றும் கடன் வழங்கி தொழில் தொடங்க ஆதரவு அளிக்கப்படும். பொருளாதார முன்னேற்றம் மற்றும் தன்னிறைவு நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்டு வருகிறார்.

Hindusthan Samachar / vidya.b